நேட்டோ நாடுகள் சீனாவுடனான பனிப்போரை விரும்பவில்லை

Tuesday, 15 June 2021 - 15:27

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
சீனாவின் இராணுவ அச்சுறுத்தல் கட்டமைப்பு சார்ந்த சவால் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் எச்சரித்துள்ளார்.

நேட்டோ தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரசெல்ஸில் இடம்பெற்றது.

இதன்போது சீனா, தமது இராணுவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

சீனா, இராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நேட்டோவை நெருங்குவதாக அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சீனாவுடன் நேட்டோ நாடுகள் பனிப்போரை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமது இராணுவத்தைத் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து வரும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகச் சீனா விளக்கமளித்துள்ளது.  

Exclusive Clips