சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது

Tuesday, 15 June 2021 - 19:42

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
மட்டக்களப்பு கரடியனாறு - மரப்பாலம் ஆற்றில், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 4 உழவு வண்டிகளை மணலுடன் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள், கரடியனாறு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Exclusive Clips