கொலன்னாவை நகரசபை உறுப்பினர்கள் இருவர் கைது!

Wednesday, 16 June 2021 - 6:53

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான மீதொட்டமுல்லவில் அமைந்துள்ள களஞ்சியசாலையிலிருந்து இயந்திரமொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொலன்னாவை நகரசபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 50 மற்றும் 52 வயதுடையவர்கள் என்று காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் கடந்த 11 ஆம் திகதி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று (16) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Exclusive Clips