இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு சர்வதேச நாடுகள் கவலையடைய வேண்டும் - இஸ்ரேல்

Sunday, 20 June 2021 - 20:46

%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D
ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி தெரிவு செய்யப்பட்டமைக்கு சர்வதேச நாடுகள் கவலையடைய வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய ஜனாதிபதி தீவிரவாத போக்கை கொண்டவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரானின் புதிய ஜனாதிபதியினால் அந்த நாட்டு அணுவாயுத செயற்பாடுகள் அதிகரிக்கக்கூடும் எனவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றிப் பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இப்ராஹிம் ரைசிக்கு எதிராக அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது.

அத்துடன் அரசியல் கைதிகளின் மரண தண்டனையுடன் அவருக்கு தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தமது வெற்றி தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இப்ராஹிம் ரைசி, அரசாங்கத்தின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புரட்சிகரமான ஊழல் எதிர்ப்பு அரசாங்கத்தை தாம் உருவாக்கவுள்ளதாகவும் ஈரானின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

Exclusive Clips