அமெரிக்க வாகன விபத்தில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 10 பேர் பலி!

Monday, 21 June 2021 - 7:56

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பச்சிளம் குழந்தை உள்ளடங்கலாக 9 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு நிலவும் சீரற்ற வானிலையால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ள அதேவேளை ஏனைய 8 பேரும் புனர்வாழ்வு மையத்தில் உள்ள சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அலபாமா பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதோடு நேற்றைய தினம் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Exclusive Clips