தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 189 பேர் கைது!

Thursday, 22 July 2021 - 7:09

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+189+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்  முதல் தனிமைப்படுத்தல் விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இதுவரையான காலப்பகுதினுள் 51, 581 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் நீண்ட வாரஇறுதி விடுமுறையில், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் மிகவும் அவதானம் செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட வார இறுதி விடுமுறை காலப்பகுதியினுள் பயணக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கைதுசெய்வதற்காக மேலதிக காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்தி விசேட நடடிவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தொடர்ந்தும் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண எல்லைகளில் காவல்துறை சோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Exclusive Clips