ஒரேசமயத்தில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமா? - இராஜாங்க அமைச்சர் விளக்கம்

Thursday, 22 July 2021 - 20:50

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் ஒரேசமயத்தில் பெற்றுக் கொள்வதால் சுகாதார ரீதியான பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று, மருந்து உற்பத்தி, விநியோக மற்றும் தரநிர்ணய இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேல் பேராதனை பகுதியில் பெண் ஒருவருக்கு ஒரே தடவையில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

மொடெர்னா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையைப் பெற்றுக் கொள்வதற்காக பிரவேசித்த பெண் ஒருவருக்கு, கண்டி - மேல் பேராதனை - மகஸ்தாவத்த பிரதேச தடுப்பூசி மையத்தில் தவறுதலாக இரண்டு செலுத்துகைகளும் ஒரே சமயத்தில் வழங்கப்பட்டன.

இதனை அடுத்து அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இது தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

Exclusive Clips