இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் செயல்பட போவதில்லை - டக்ளஸ் தேவானந்தா

Thursday, 22 July 2021 - 21:57

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
நாட்டை விற்பனை செய்வதற்கோ அல்லது அயல் நாடானா இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ தாம் ஒருபோதும் செயல்பட போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
 
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
பூநகரி - கௌதாரிமுனையில் கடல் அட்டை பண்ணைக்கு சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமையானது அந்த நிறுவனத்தினது முதலீடுகளையும், தொழில் நுட்பத்தினையும் பெற்று மக்களுக்குப் பயனை பெற்றுக்கொள்வதற்காகும்.
 
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ, நாட்டை விற்பனை செய்யவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
 
சீனாவின் தொழில்நுட்ப அறிவை பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் என அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Exclusive Clips