டெல்டாவை விட வீரியம் கொண்ட மற்றொரு வைரஸ் திரிபு விரைவில் உருவாகக்கூடும் - உலக சுகாதார ஸ்தாபனம்

Thursday, 22 July 2021 - 22:49

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81++%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
டெல்டா வைரஸ் திரிபினை விடவும் வீரியம் கொண்ட மற்றொரு கொரோனா வைரஸ் திரிபு விரைவில் உருவாகக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கேப்ரியேசஸ் , இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது டெல்டா கொரோனா வைரஸ் திரிபு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் சமமான அளவில் தடுப்பூசிகள் கிடைக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகளில் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் முதலாம் தடுப்பூசியினை பெற்றுள்ளார்கள்.

எனினும், அபிவிருத்தியடைந்த நாடுகளின் மக்கள் தொகையில் 50சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இது கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளில் திட்டமிடப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டியது அவசியமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Exclusive Clips