ஆப்கானிஸ்தானில் மரணித்த - காயமடைந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, 26 July 2021 - 22:24

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இந்த வருட முதல் அரையாண்டு பகுதியில் ஆப்கானிஸ்தானில் மரணித்த அல்லது காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த கால பகுதியினில் ஆயிரத்து 600 இற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் பலியானவர்களை விட இந்த வருடம் பலியான பொது மக்களின் எண்ணிக்கை 47சத வீதத்தால் அதிகரித்துள்ளது.

தாலிபான்களுடனான மோதல் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களின் மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள தாலிபான்களுடன் ஆப்கானிஸ்தானிய படையினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றது.

அமெரிக்காவின் தலைமையிலான வெளிநாட்டு படையணிகள் கடந்த 2001 ஆண்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து தாலிபான்களை வெளியேற்றியிருந்தது.

20 வருடங்களாக நிலைகொண்டிருந்த வெளிநாட்டு படையணிகளில் பெருமளவிலானவை தாயகம் திரும்பியுள்ள நிலையில் எஞ்சியபடைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips