அரசாங்கம் - எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு காணப்பட வேண்டும் - மைத்ரிபால சிறிசேன

Thursday, 29 July 2021 - 9:33

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9
தேசிய கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (28) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடொன்றை வளர்ச்சி பாதையில் இட்டு செல்வதற்காக, குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

நாட்டை நிர்வகித்த எந்த அரசாங்கங்களினாலும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கவில்லை.

வெளிநாட்டு உறவுகள், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்ப போன்ற விடயங்களுக்காக தேசிய கொள்கை வகுக்கப்படுவது போன்று அதற்கான இணக்கப்பாடுகளும் ஏற்படுத்தி கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips