கொவிட் பரவல் தொடர்பில் பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் - ஹேமந்த ஹேரத்

Thursday, 29 July 2021 - 12:44

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++-+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D
நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள திட்டங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்திரம் 1,900க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், 63 கொவிட் மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் நாளொன்றில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000ஆக அதிகரிக்கக்கூடும்.

நாளைமறுதினம் அது 2,500ஆக அதிகரிக்கலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தற்போது தளர்த்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொது மக்கள் மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சமூகத்தில் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் என்பன குறைவடைந்து வருகின்றது.

இதுபோன்ற செயற்பாடுகள் கொவிட் பரவலை அதிகரிக்கக்கூடும்.

எனவே, பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக நிலையங்களில் சுகாதார வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

வர்த்தக நிலையங்களுக்குள் செல்வதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை பரிசோனை செய்துக்கொள்ள வேண்டும், தொற்று நீக்கியை பயன்படுத்தி  அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எம்மால் இனிவரும் காலங்களில் நாட்டை முடக்க முடியாது, நாட்டின் பொருளாதாரம் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே மக்கள் இதுதொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Exclusive Clips