உத்தேச நிதி சீராக்கல் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு!

Thursday, 29 July 2021 - 16:26

%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%21
உத்தேச நிதி சீராக்கல் சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளை உயர்நீதிமன்றம் பூர்த்தி செய்துள்ளது.

உயர்நீதிமன்றுக்கான எமது செய்தித்தொடர்பாளர் இந்த தகவலை வழங்கினார்.

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட குறித்த நிதி சீராக்கல் சட்ட மூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, ஐக்கிய தேசிய கட்சி என்பன எதிர் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இதுதொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில், நேற்று சட்ட மா அதிபர் திணைக்களம் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தது.

இதன்படி குறித்த உத்தேச சட்ட மூலத்தின் 7 சரத்துக்கள் திருத்தியமைக்கப்படவுள்ளதாகச் சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று தமது விசாரணைகளை நிரைவு செய்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பான வியாக்கியானத்தை வெகு விரைவில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கும் என்று இன்றைய விசாரணை நிறைவில் உயர்நீதிமன்றம் அறிவித்தது.

Exclusive Clips