தடுப்பூசி பெற்றிருக்காவிட்டால் 2 மடங்கு பேருந்து கட்டணம்!

Saturday, 31 July 2021 - 19:29

%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
நாளை முதல் பேருந்து சேவைகளை நடத்தும் முறைமை தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.

இதன்படி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு பேருந்துகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதேநேரம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத பயணிகளிடம் பயணக் கட்டணத்தில் இரண்டு மடங்கு பணத்தை அறவிடுவதற்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் இதற்கு அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை வழமை போன்று இடம்பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்போது போக்குவரத்து சேவைகள் சுகாதார கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சில தனியார் பேருந்துகள் அவ்வாறு நடந்துக் கொள்வதில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

இதேவேளை, நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகளும் மீள ஆரம்பமாகவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Exclusive Clips