உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனைக்கு இன்று முதல் தடை!

Sunday, 01 August 2021 - 8:39

%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%21
பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனை இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
 
அத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
இதற்கு மேலதிகமாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலை அமைச்சரவை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்படும் கத்தி, கரண்டி, முள்கரண்டி, ஊதுபத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன், உரிய பருமைக்கும் குறைவான பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் உற்பத்தியிலான பூமாலைகள், இடியப்பத் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளும் தடை செய்வதற்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips