நேற்று 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Sunday, 01 August 2021 - 10:46

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
நாட்டில் நேற்றைய தினம் வரையில், 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில், 83 சதவீதமானோருக்கு கொரோனா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் முதலாம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை 100 சதவீதம் நிறைவுசெய்ய முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 330,868 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் 306,507 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், 20,100 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து 45 ஆயிரத்து 206ஆக அதிகரித்துள்ளது.

17 இலட்சத்து 53 ஆயிரத்து 818 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 2,395 பேருக்கு நேற்றைய தினம் பைஸர் முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதுடன், அந்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 201,495 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 1,866 பேருக்கு மொடர்னா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில், 713,659 பேருக்கு மொடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Exclusive Clips