மாகாணங்களுக்கு இடையில் இன்று பேருந்து சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன!

Sunday, 01 August 2021 - 12:58

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%21
மாகாணங்களுக்கு இடையில், பேருந்து சேவைகள் மாத்திரமே இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை நாளை முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளைய தினத்தில் கொழும்புக்கான 15 தொடருந்து சேவைகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரச சேவையாளர் வழமை போன்று நாளை பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விசேட தொடருந்து சேவைகளும் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


Exclusive Clips