ஆப்கான் பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தில் தாக்குதல் 8 பேர் பலி!

Wednesday, 04 August 2021 - 21:50

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

காபூலில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் இதுவென அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தலிபான்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 துப்பாக்கிதாரிகள் தாக்குலை நடத்தியதோடு பாதுகாப்பு தரப்பினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் பல அரச தலைவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியமையை அடுத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

Exclusive Clips