சீன முன்பள்ளியொன்றில் மீண்டும் கொரோனா பரவல்

Tuesday, 14 September 2021 - 13:16

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியொன்றிலிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் குறித்த முன்பள்ளியில் 100 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் தந்தைக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதியான மாணவியின் தந்தை கடந்த ஒகஸ்ட் 4ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு திரும்பியிருந்தார்.

இதனையடுத்து அவர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், அதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

எனினும், 38 நாட்களின் பின்னர் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், முன்பள்ளி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உடனடியாக கொரோனா பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு சீனா சுகாதாரத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips