இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பதவி விலகினார்

Wednesday, 15 September 2021 - 14:10

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று  தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அனுப்பிய கடிதத்தை கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு வெலிக்கடை மற்றும் அநுராதப்புரம் சிறைச்சாலைகளுக்கு சென்று அரசியல் கைதிகள் சிலரை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்தே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நேற்று கண்டனத்தை தெரிவித்திருந்தன.

அதேநேரம், சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சமூகவலைத்தள பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips