அமுலுக்கு வந்தது நிதிச் சீராய்வு சட்டமூலம்

Thursday, 16 September 2021 - 7:31

+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
2021 ஆண்டின் 18 ஆம் இலக்க நிதிச் சீராய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சட்டமூலமானது கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இதன்படி சபாநாயகர் அதில் கையொப்பமிட்டதன் ஊடாக குறித்த சட்டம் நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டமூலத்தின் ஊடாக வெளிப்படுத்தபடாத சொத்துக்களை முதலீட்டுக்காக பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips