டோபர்மேனை திருடி விற்பனைக்காக இணையத்தளத்தில் விளம்பரப்படுத்திய நபர் கைது

Thursday, 16 September 2021 - 9:41

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
காலி, தெலிகட பிரதேசத்தில் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 'டோபர்மேன்' வகை நாயொன்றை திருடி, அதனை விற்பனை செய்வதற்காக இணையத்தளத்தில் விளம்பரம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

தனது நாய் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதை இணையத்தில் கண்ட குறித்த நாயின் உரிமையாளர், இது தொடர்பில் தெலிகட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் காலி, ரெஜ்புர பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சந்தேகநபர் மீது 4 கோழிகளை திருடியமை தொடர்பிலும் குற்றச்சாட்டு காணப்படுவதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணைகளில் விடுவிக்க காலி மேலதிக நீதிமன்ற நீதிவான் பவித்ரா சஞ்சீவனி பதிரண உத்தரவிட்டார்.Exclusive Clips