ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை

Thursday, 16 September 2021 - 9:16

%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவர் எராஜ் பெர்னாண்டோவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையில் உள்ள காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் காவல்துறையில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips