பிரித்தானியாவில் 12 -15 வயதுக்கிடைப்பட்டோருக்கு தடுப்பூசி

Tuesday, 21 September 2021 - 8:49

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+12+-15+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF
பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியா நான்காம் இடத்தில் உள்ளது.

பிரித்தானியாவில் நாளாந்த கொவிட்-19 தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அந்நாட்டு சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகின்றது.

இதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பிரித்தானியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு குறித்த வயதினருக்கு பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 74 இலட்சத்து 65 ஆயிரத்து 448 பேருக்கு இதுவரையில் கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளதுடன், அங்கு 1 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.
Exclusive Clips