அவுஸ்திரேலியாவில் கட்டாய தடுப்பூசி நடைமுறைக்கு எதிர்ப்பு: மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

Wednesday, 22 September 2021 - 13:06

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கட்டாய தடுப்பூசி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக இன்றும், ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அங்குள்ள கட்டுமானப் பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி வழங்குமாறு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கட்கிழமை கட்டுமானப் பணியாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அதனை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து விக்டோரியா மாநிலத்தில் உள்ள சகல கட்டுமான பணிகளும் இடைநிறுத்தப்பட்டதுடன் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.Exclusive Clips