500 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை இலவசமாக பகிர்ந்தளிக்க அமெரிக்கா தீர்மானம்

Wednesday, 22 September 2021 - 15:18

500+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88++%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
உலக நாடுகளுக்கு 500 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை இலவசமாக பகிர்ந்தளிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அமெரிக்காவினால் உலக நாடுகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை பில்லியனாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இன்றைய மாநாட்டில் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த வருடம் இறுதிக்குள் உலக நாடுகளில் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் நோக்கிலேயே குறித்த தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளளது.


Exclusive Clips