கொவிட் தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு!

Thursday, 14 October 2021 - 16:23

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%21
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு, அக்ரஹார காப்புறுதி நிதியத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் திட்டமொன்றை வகுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இன்று(14) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி இழப்பீடு வழங்கல் முறைமையொன்றை, இவ்வருடத்துக்கான பாதீட்டின் மூலம் செயற்படுத்த அப்போதைய நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தார்.


Exclusive Clips