தொற்று நீக்கி திரவத்தை பருகிய 12 ஈரானிய சிறைக்கைதிகளில் இருவர் மரணம்

Thursday, 14 October 2021 - 17:03

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+12+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய சிறைக் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி தொற்று நீக்கித் திரவத்தை (disinfectant liquid) பருகிய ஈரானிய சிறைக்கைதிகளான மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Exclusive Clips