பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

Wednesday, 20 October 2021 - 15:12

%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
உலகத்தில் முதல் முறையாகப் பன்றியொன்றின் சிறுநீரகத்தை உறுப்புமாற்ற சிகிச்சை ஊடாக மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள NYU Langone Health வைத்தியசாலையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக மூளைச்சாவு அடைந்த பெண்ணொருவருக்கே இந்தச் சிறுநீரகம் அறுவை சிகிச்சைமூலம் பொருத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த நோயாளியின் குடும்பத்தினர் அனுமதியளித்த நிலையில் இந்த உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியால் குறித்த சிறுநீரகம் நிராகரிக்கப்படாமல் இருப்பதாகவும், இதுவரையில் அது சாதாரணமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உறுப்பு மாற்று சிகிச்சை முறை வெற்றியளித்தால், உறுப்பு மாற்றத்திற்கு தேவைப்படும் மனித சிறுநீரகங்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.


Exclusive Clips