இந்தியாவில் ஒரு மில்லியன் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Thursday, 21 October 2021 - 13:03

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
இந்தியாவில் ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதான அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இதுவரையான காலப்பகுதியில் குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் முதலாவது முறையாகக் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தடுப்பூசி வழங்கப்பட்டது.

இதற்கமைய 278 நாட்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் நாளாந்தம் சராசரியாக 3.6 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 30 சதவீதமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் 707 மில்லியன் மக்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக இந்தியச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பில்லியன் மக்களுக்கு முழுமையான தடுப்பூசிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exclusive Clips