உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 மலையேற்ற வீரர்கள் பலி!

Saturday, 23 October 2021 - 9:25

%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+11+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், மலையேறிய 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

லம்ககா (Lamkhaga) கணவாய் பகுதியில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக அவர்கள் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மலையேற்ற வீரர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வழிகாட்டிகள் என மேலும் சிலர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலங்கு வானுர்திகள் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் பணிகளில் இந்திய விமானப் படையினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


Exclusive Clips