ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை பேரழிவு இடம்பெற்றிருக்கலாம்

Saturday, 23 October 2021 - 21:12

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை பேரழிவு இடம்பெற்றிருக்கலாமென அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றது.

இந்தநிலையில் ஆயிரக்கணக்கான துருப்பினர்களும் பாரிய கனரக ஆயுதங்களும் மியன்மாரின் வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள பகுதிகளுக்கு நகர்த்தப்படுவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக மியன்மாருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி டொம் அன்ட்ரு தெரிவித்துள்ளார்

மியன்மார் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வருடாந்த ஆய்வறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆய்வுகள் மியன்மாரின் இராணுவ அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றன.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றதிலிருந்து இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 8 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Exclusive Clips