ஈரானில் மேடையில் பேசிக் கொண்டிருந்த ஆளுநரை தாக்கிய மர்ம நபர்! (காணொளி)

Sunday, 24 October 2021 - 12:17

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவ்விடத்துக்கு வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலைக்கு தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன்,இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் அபிதின் கோரம் கூறுகையில், "குறித்த நபர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சிரியாவில் இருந்தபோது எதிரிகளால் சூழப்பட்டு ஒரு நாளைக்கு 10 முறை சவுக்கடி வாங்கி இருக்கின்றேன். பலமுறை என் நெற்றியில் துப்பாக்கி ஏற்றப்பட்டுள்ளது. அந்த எதிரிகளுக்கு இணையாக இந்நபரை கருதுகின்றேன். இருப்பினும் அவரை மன்னிக்க விரும்புகின்றேன்" என்றார்.


Exclusive Clips