வெளிநாட்டு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன

Sunday, 24 October 2021 - 14:31

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9
பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான கென்ட் என்ற போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

133 மீற்றர் நீளமும், 16 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள் இன்று (24) கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளன.

ஷாதுல் மற்றும் மாகர் என்ற குறித்த போர்க் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் சில தினங்களுக்கு நங்கூரமிடப்படவுள்ளன.

இந்தக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Exclusive Clips