சோடிக்கப்பட்ட வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Sunday, 24 October 2021 - 15:22

%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்தை மேற்கோள்காட்டி, தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து உரத்தைக் கொண்டுவருவதற்காக, அரச வங்கி ஒன்றில் தனிப்பட்ட கணக்கு ஒன்று ஆரம்பித்தமை தொடர்பில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி, குறித்த பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைக்குப் புறம்பான மற்றும் வெறுக்கத்தக்க அடிப்படையில் சோடிக்கப்பட்ட வதந்தியை ஜனாதிபதி செயலாளர் நிராகரிப்பதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Exclusive Clips