மத்திய பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோருக்கு மதுபான விலையில் தள்ளுபடி

Thursday, 25 November 2021 - 10:16

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF
இந்திய மத்திய பிரதேசத்தில் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மதுபான விலையில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அம்மாநில மண்டசூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய தயாரிப்பான கோவெக்சின் மற்றும் கொவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 117 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் மத்தியில் சிலர் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டுவது மிகக்குறைவாகவே உள்ளது. அத்தகையோரை ஊக்குவிக்கும் முகமாக தற்போது தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டசூர் மாவட்டத்தில் 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மதுபான விலையில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 2 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டதற்குரிய சான்றிதழைக் காண்பித்து இந்த தள்ளுபடியை பெறலாம் என்று மண்டசூர் மாவட்ட கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.






Exclusive Clips