சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணிநேரத்தில் இராஜினாமா செய்தார்!

Thursday, 25 November 2021 - 11:10

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
சுவீடனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட மெக்டலெணா எண்டர்சன் (Magdalena Andersson) பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக நேற்று (24) அவர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கூட்டணிக் கட்சியினர் விலகியமை மற்றும் பாதீடு தோற்கடிக்கப்பட்டமை உள்ளிட்ட காரணங்களினால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதீட்டை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூட்டணி பசுமைக்கட்சி அறிவித்தது.

இதனையடுத்து, தான் பதவி விலகுவதாக அறிவித்த அவர், மீண்டும் தனித்து ஆட்சியமைக்கும் கட்சியின் தலைவராக, பிரதமர் பதவியை வகிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

பிரதமரின் பதவி விலகல் முடிவைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும் என  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


Exclusive Clips