22 வயதிற்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்வது தொடர்பில் ஆராய்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Thursday, 25 November 2021 - 16:28

22+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7
மாணவர்களின் பல்கலைக்கழக பட்டப்படிப்பை தாமதப்படுத்தக் கூடாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) இன்று(25) இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மருத்துவப் பட்டப்படிப்பை 22 வயதிற்குள்ளும் ஏனைய பட்டப்படிப்புகளை 20 வயதிற்குள்ளும் முடிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன ஏலவே இது தொடர்பில் கவனம் செலுத்தி திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதுடன், காலதாமதமின்றி பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்களிடமிருந்து வருமான வரி அறவிடுதலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்படும்.

அரச சேவையாளர்களின் வேதனம் தொடர்பில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி அமைச்சு, அரசாங்க நிர்வாக அமைச்சுடன் இணைந்து வேதன ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய அதனை தீர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


Exclusive Clips