2 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் சுங்கத்தினரால் மீட்பு

Thursday, 25 November 2021 - 17:31

+2+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%27%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%27+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு, விமானம் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான குஷ் எனப்படும் ஒருவகை கஞ்சாவை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று கைப்பற்றியுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு, அஹங்கம, பிலியந்தலை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள போலி முகவரிகளுக்கு இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தப் பொதிகளின் உரிமையாளர்கள் அவற்றை பொறுப்பேற்க மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு முன்வராததால் அதில் உள்ள முகவரிகளை சுங்க அதிகாரிகள் சரிபார்த்தபோது, ​​அவை போலியானவை என்பது உறுதியானது.

பின்னர் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறித்த பொதியைப் பரிசோதித்தபோது, ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள 10 கிலோ குஷ் என்ற கஞ்சா வகை போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொதிகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Exclusive Clips