எரிவாயு இரசாயன செறிமானம் மாற்றம் தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது

Thursday, 25 November 2021 - 22:32

%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
இரசாயன செறிமானத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே, கடந்த சில நாட்களில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம், அத்திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அண்மையில், மெக்டொனால்ட் உணவகத்தில் ஏற்பட்ட தீப்பரவலுக்கு, அந்த உணவகத்தில், எரிவாயு கசிவு ஏற்பட்டு, வெடித்தமையே காரணமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில், செயல்நிலையில் இருந்த மின்சார உபகரணங்களில் இருந்து வௌியான தீப்பொறிகளும் அதற்குக் காரணமாகும் என்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், இரத்தினபுரி, அலவ்வ, வெலிகம உள்ளிட்ட சில பிரதேசங்களில், இதுபோன்று எரிவாயு கசிவு காரணமாக, ஏற்பட்ட தீப்பரவல் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டன.

இதேநேரம், இன்றைய தினம், கொட்டாவ பன்னிப்பிட்டி பகுதியில் இதுபோன்றதொரு சம்பவம் பதிவானது.

வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்திற்கு எரிவாயு கசிவே காரணமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.


Exclusive Clips