ரஷ்யாவில் நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 52 பேர் பலி

Friday, 26 November 2021 - 14:27

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+52+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் லிஸ்ட்வேஸ்னியா என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் உள்ள நிலக்கரி தூணில் தீப்பிடித்ததில் 52 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகரம் மொஸ்கோவிலிருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

சுரங்கத்தின் காற்றோட்டத்துக்காக ஏராளமான குழிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதில் ஒரு குழியின் முகப்பு பகுதியில் படிந்திருந்த நிலக்கரி தூணில் திடீரெனத் தீப்பிடித்து சுரங்கத்துக்குள் பரவியது.

தீயில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 52 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் 49 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக சுரங்க நிறுவன அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் 58 சுரங்கங்கள் உள்ளன. அதில் 34 சதவீத சுரங்கங்கள் பாதுகாப்பாற்றவை என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதில் ஒரு சுரங்கத்தில்தான் விபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips