ஜப்பானுக்கு பிரவேசிக்க சகல வெளிநாட்டவர்களுக்கும் தடை!

Monday, 29 November 2021 - 11:32

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%21+
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு உலகம் முழுவதும் பரவி வருவதால், தமது நாட்டின் எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் நாளை (30) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை ஜப்பானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, தென்னாபிரிக்கா மற்றும் அதன் 8 அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிகளையும் ஜப்பான் அறிவித்திருந்தது.

எனினும், ஒமிக்ரொன் வைரஸ் திரிபு பல நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்தப் புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Exclusive Clips