அமெரிக்க பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு: 3 மாணவர்கள் பலி - எண்மர் காயம்

Wednesday, 01 December 2021 - 6:33

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%3A+3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்காவின், மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ரோய்ட் நகரில், உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 8 பேர் காயமடைந்துள்ளனர் என்றும்  அவர்களில் ஒருவர் அப்பாடசாலையின் ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 வயது மாணவர் ஒருவரும், 14 மற்றும் 17 வயதுடைய மாணவிகள் இருவருமே சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயதுடைய மாணவரொருவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அத்துடன், அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Exclusive Clips