பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம் கனடாவில் நிறைவேற்றம்: எதிர்க்கட்சி ஏகமனதாக ஆதரவு

Friday, 03 December 2021 - 11:39

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம் ஒன்று, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின் அனுமதியை பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்க கோரி சமர்பிக்கப்பட்ட சட்டமூலம் மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் எவரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது.

இந்த சட்டமூலத்தை  ஆளும் லிபரல் கட்சி மட்டுமல்லாது, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டமூலம் மீது தனது கட்சி எம்.பி.க்கள் சுதந்திரமாக வாக்களிக்க எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் எரின் ஓ டூல் அனுமதி அளித்திருந்தார்.

ஆனாலும் உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவு அளித்தது ஆச்சரியம் என்று லிபரல் கட்சி எம்.பி. சீமஸ் ஓ ரீகன் கருத்து தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் நிறைவேறியது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சரும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆலோசகருமான ரெண்டி பொய்சனாட் கருத்து தெரிவிக்கையில், ‘‘எவரும் சித்திரவதைக்கு சம்மதிக்க மாட்டார்கள்’’ என குறிப்பிட்டார்.Exclusive Clips