தென்னாபிரிக்காவில் 7 மாகாணங்களுக்கு பரவியது ஒமிக்ரொன்

Friday, 03 December 2021 - 19:01

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D
தென்னாபிரிக்காவில் இனம் காணப்பட்ட ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு, அங்குள்ள 7 மாகாணங்களில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் ஜோ பாஹால தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு கொவிட் - 19 தொற்றின் நான்காம் அலையின் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபினை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த சுகாதார அமைச்சர், இந்த தொற்றினால் ஏற்படும் மரண எண்ணிக்கையினை குறைக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சகல தென்னாபிரிக்க பிரஜைகளும் தவறாமல் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மிகக்குறுகிய காலப்பகுதியில், ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு துரிதகதியில் பரவி வருவதாக தென்னாபிரிக்க தொற்று நோய் பிரிவின் சிரேஷ்ட மருத்துவ விஞ்ஞானி மைக்கல் குறூமி தெரிவித்துள்ளார்.

இந்த நோய் சிறு பராயத்தவர்களிடம் இருந்து வயது வந்தவர்களுக்கும் பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தென்னாபிரிக்க மருத்துவமனைகளில் நான்கு வயதிற்கு குறைந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exclusive Clips