ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

Tuesday, 07 December 2021 - 13:13

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%21
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அத்துடன் கிழக்கு ஐரோப்பிய இராணுவ இருப்பு அதிகரிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ள நிலையில் வெள்ளை மாளிகை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உக்ரைனுக்கு அருகில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கு அமெரிக்க எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


Exclusive Clips