இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் 17 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலைகளின் முகாமையாளர்கள் இருவரை கைதுசெய்ய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதியன்று இரவு, செயன்முறை பரீட்சையென கூறி மேற்படி 17 மாணவிகளை, சந்தேகநபர்களான பாடசாலை முகாமையாளர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, அந்த மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்துகொடுத்து, மயக்கமடையசெய்த சந்தேக நபர்கள், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்திற்கு மறுநாள் குறித்த மாணவிகள் பாடசாலைக்குச் செல்ல மறுத்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது, இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையை அடுத்து சந்தேக நபர்களான பாடசாலை முகாமையாளர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதால் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.