வெளிநாட்டு பொதிகளை திறக்கும் போது முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தல்

Tuesday, 18 January 2022 - 17:02

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88++%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை திறக்கும் போது முகக்கவசம் மற்றும் கையுறை என்பவற்றை அணியுமாறு சீன மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பீஜிங்கில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திரிபு கனடாவிலிருந்து நாட்டுக்கு வந்த பொதியிலிருந்து வந்திருக்கலாம் என சீன அதிகாரிகள் அறிவித்த நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரொன் தொற்றுறுதியான நபர் கனடாவில் இருந்து அமெரிக்கா ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை திறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கைகளை அதிகரிப்பதாக சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips