ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்திற்கான மேலதிக தினம் ஒன்றினை பெற்றுக்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, சபாநாயகருக்கு அறிவித்து நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு மேலதிகமாக எதிர்வரும் 21ஆம் திகதியும் ஒத்திவைப்பு விவாதத்திற்கான தினத்தை பெற்றுக்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சந்திப்பின் போது, திருகோணமலை எண்ணெய் குத வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவுடன், ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow US

Most Viewed Stories