மின் துண்டிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு (காணொளி)

Wednesday, 19 January 2022 - 15:31

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நாட்டில் அமைந்துள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயங்குவதற்கு தேவையான எரிபொருள் இன்மையால் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் குழு உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

நாளாந்த மின் உற்பத்திக்கு அத்தியாவசியமான எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேர அட்டவணை தொடர்பில் அவர் அறிவித்தார்.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டகங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய மற்றும் அவசரகால பொது சேவை பகுதிகளுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips